உறுதிமொழி

வாழ்க வாழ்க செங்குந்தர்!

வெல்க வெல்க செங்குந்தர்!

நாம் செங்குந்த குலக்கடவுள் அருள்மிகு முருகப்பெருமான் ஆணையாக ,மனசாட்சியுடன் கீழ்க்கண்டவாறு உறுதி பூணுகிறோம் .

1 .நாம் இந்திய குடிமக்களாய் இருப்பதை பெருமையாகக் கருதுகிறோம்.நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ,நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம் .

2 . நாம் செங்குந்தர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு ,நமது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சமூக, பொருளாதார, கல்வி,தொழில் ,காலச்சார முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் .சமூக நலம் காப்போம் .

3 . நாம் மற்ற இனத்தவரிடம் மனிதநேயம் கொண்டு ,நட்புடனும் ,அன்புடனும் பழகுவோம் .

4 .நாம் ,நமது உரிமைகளைப் பாதுகாக்க எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுவோம் .

5 .நாம் நமது சங்கம் நிறுவிய சான்றோர்களை நினைவில் கொண்டு ,சங்கத்தை நாளும் வளர்த்திடுவோம் .