சமூக வரலாறு

செங்குந்தர்

செங்குந்தர் என்பது இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் ஒரு சாதியை குறிக்கும். இச்சமூக மக்கள் கைக்கோளர் என்கிற பெயராலும் அழைக்கப்படுவர். செங்குந்தர் முதலியார் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படும் சாதிகளில் ஒன்றாகும்.


பெயர் காரணம்

செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.


கற்பிதம்

செங்குந்தர் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர் என்பதால்,திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது ஒன்பது செங்குந்த வீரர்களாய் உடையணிந்து வீரவாகுனின் தளபதிகளுடன் குமரன் சூரனை வதம் செய்வது இன்றும் நடைமுறையில் உண்டு.திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசி திருவிழாவில் பன்னிரெண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


வரலாற்றுச் சான்றுகள்

தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது தோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்தர் பிரபந்த திரட்டுஎன்று நூலாக பாதிக்கப்பெற்றுள்ளது. இடைகாலச்சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றி செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

பிற்காலச்சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப்படியாக நெசவுத் தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் முழுமையாக நெசவுத்தொழிலுக்கு மாறினர். நெசவுத்தொழிலோடு, நிலக்கிழார்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

திருப்பதி,திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர்.மேலும் பல ஆலயங்களுக்கு நிலம்,நடை உள்ளிட்ட பல்வேறு நிர்பந்தங்களை இவர்கள் அளித்திருந்தனர்.


செங்குந்தர் சிறப்பு

செய்யுந் தொழிலை சீர்தூக்கிப் பார்க்குங்கால் நெய்யுந்தொழிலுக்கு நிகரில்லை-வையகத்தில் என்று ஓளவையாரால் சிறப்பித்து பாடப்பெற்றதும் பாவம் அல்லாததும் என்று கருதப்படும் தறி நெய்தல் தொழிலை குலத்தொழிலாக கொண்டவர். முன்னோர் மொழிப்பொருளேயன்றி,யவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம் என்பதற்கு சான்றாக,இந்நூலில் பலவிடங்களில் முன்னோர் மொழிந்த மொழிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார்.மற்றும்,செங்குந்தரின் அருமை பெருமை உயர்வுகளையும்,கடவுள் பற்று,குணந்தொழில் முதலிய இயல்புகளையும் விளக்கியுள்ளார்.செங்குந்தர் வீரவாகு தேவரின் வழிவந்தோர் எனவும்,ஈகை,வாய்மை,ஒப்புரவு,கொல்லாமை முதலிய அருங்குணங்களையும் உடையவர் எனவும் கூறியுள்ளமை காணத்தக்கது. உலகத்து மக்கட்கு மானத்தை காப்பதற்கு உறுதியான ஆடை முதலிய உடுக்கைகளே,அவற்றை முற்காலங்களில் நூல் நூற்கும் பொறி இல்லாத போழ்தத்து பெண்டிரும் ஆடவரும் தங்களது கையாளும் சிறு கருவிகளினாலும் பஞ்சுகளை கொண்டு நூல் நூற்று ஆடை முதலிய வமைத்து மானத்தை நீக்கி வைத்தவர்கள் தமிழ்நாட்டு செங்குந்தர் என்னும் பெரும் பிரிவினரே யாவர். உமாதேவியின் பாதச் சிலம்பில் உதிர்ந்த நவமணிகளில் அப்பாடப்பதியார் திருவுருவத்தை கண்ணூற்றுச் சிவபெருமான் கொண்டருளிய இச்சையால் கருவுற்ற ஒளியுடைய நவரத்தினைப் பெயர்கொண்ட மகளிர்களிடத்தில் அதிமேம்பாடடைந்த வீரத் தன்மையுடன் உதித்த பெரிய தவத்தினை யுடைய வீரவாகுதேவ முதலிய நவவீரர்களின் வழித்தோன்றினவார் இச் செங்குந்தர் என்பதாம்.இச்செய்தி,புராண பிரசித்தமாம் ஞானப்பிரகாச முனிவரால் செய்யப்பட்ட பிள்ளைத்தமிழ், மயில்வா கனத்தோன் துணையாக வந்தோர் தாலோ தாலேலோ தேவியுமை பாகச் சிலம்பில்வரு வீரியர்கள் சிறுதே ருருட்டி யருளே என்ற அடிகளால் இனிதுணரலாம். குந்தம் என்னும் வீரப் படைக்கு உரியார் செங்குந்தர் என்பது பொருள். (குந்த மெனினும் ஈட்டி எனினும் ஒக்கும்) இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்னர் சேந்தனார் தனது திவாகர நிகண்டினு செங்குந்தப் படையர் சேனைத் தலைவர் தந்து வாயர் காருகர் கைக்கோளர் என்று செங்குந்தரைச் சிறப்பிக்கின்றார். இத்தினின்று செங்குந்தப்படையர் முதலிய ஐந்து பெயர்களும் செங்குந்தர்களையே குறிக்கின்றன என்று அறிகிறோம்.ஆயினும், அடியார்க்கு நல்லார்,சிலப்பதிகாரத்து இந்திரவிழவூரெடுத்த கதையுள்,பட்டினு மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைகாரிக ரியற்கையும் என்னுமிடத்துச் சாலியரையே குறிப்பிட்டுக்,கைக்கோளர் என்கின்ற சாதியாரைக் காட்டாமல் விட்டார்.இது செங்குந்தர்கள் சேனைத் தலைவர்களாகவும்,தொண்டைமான் முதலியோர்களாற் பெரும் பட்டங்களும் அரசச் செல்வங்களும் அடையப்பெற்று சிறப்புற்றிருந்த பண்டைய பெருங்குடிகளாய் அமைத்ததால் போலும்.இவர்களது சிறப்புகளை பிரபந்தங்கள் பலவும் புகழ்ந்து கூறும் நாகை முத்துக் குமாரதேசிகரால் செய்யப்பட்டக் களித்துறையந்தாதியில், ''தப்பில் புராணம் பரணி உலா பிள்ளைத் தண்டமிழ்முன் செய்யும் பிரபந்தம் எண்ணில பெற்றவர் செங்குந்தர்'' என்று வருவனவற்றால் இவர்கள் பிரபந்தங்களால் புகழப் பெற்றவர்கள் எனவறியலாம்.


செங்குந்தர்கள் சிறந்த வீரர்கள்

சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர் செங்குந்தரே சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே என்ற,பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும்.


சீலமுடையவர்

தேவாரமுற்றும் படிப்பாரும் அங்கையிற் செங்குந்தரே திருவாசகஞ்சொல் ஒருவா சகத்தரும் செங்குந்தரே நிதம் அந்திசந்தி சிவசிந்தனை மறவாதவ ரவாரிச் செங்குந்தரே என்று, வரும் பழைய நூலடிகளால் அறியலாம்.


சொன்ன சொல் தவறாதவர்

தேவே விலகினும் நாவிலங் காதவர் செங்குந்தரே என்று வரும் நூலடியால் உணரலாம். செங்குந்தரை பற்றிய தகவல்கள் பல இருக்கின்றன.பழைய காலத்துக் கல்வெட்டுகளில் கண்ட விசயாலயன், பராந்தகன்,கோப்பரகேசரி,இராஜேந்திரன்,திரிபுர தேவன்,இராசராசன்,விக்கிரம சோழன்,அநபாயன்,சுந்தர பாண்டியன்,வல்லாள தேவன் முதலிய அரசர்களது ஆணையில்,இப்பிரிவினரை பாராட்டிக் கூறியுள்ளனர்.திருவண்ணாமலையில் வல்லாள தேவரால் ஏற்படுத்தப்பட்ட கோபுரத்தின் தென்பாகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு அறிய கல்வெட்டு ஒன்றில்,இவர்களது சிறப்புக்கள் கூறப்பட்டிருந்தன.

பல்குன்றக் கோட்டத்துச் சிங்கபுர நாட்டு அண்ணமங்கலயப்பற்று தேவனூர்க் கோயில் கல்வெட்டுகளிலும்,வெண்ணிக்கோட்டது கோலிய நல்லூரிலும்,பையூர்க் கோட்டத்துக் கீழ்ப்பட்டைய நாட்டின் திருவான்பூர் என்னும் தமிழ் முருகவேளாரது கோயிலுள்ளும் எழுதப்பட்டுள்ள அறிய கல்வெட்டுகளுள்,இவர்களது பெருமைப்பாடுகள் குறித்து மிகச் சிறப்பிக்கப்படுகின்றன்.இக்கல்வெட்டுகளால் பல கோயில்கள் எழுப்பித்தும் பல கோயில்களுக்கு நித்திய கட்டளைகள்,திருவிழாக்கள் முதலிய தான தருமங்கள் செய்வித்தும் வாழ்ந்தவர் செங்குந்தர் என்பது விளங்கும்.

இவர்களது வரலாற்றைத் தொண்டை மண்டல வரலாறு என்னும் நூலிலும்,இம்மரபில் தோன்றி திக்கெங்கணும் வெற்றிக்கொடி நாட்டிய ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பெற்ற,''ஈட்டி எழுபது'' என்ற நூலினும்,கடம்பவன புராணத்தில் வீர சிங்காதனச் சறுக்கத்திலும்,செங்குந்தர் பரணி,சேனைத்தலைவர்,உலா,பிரம்மாண்ட புராணம்,கந்த புராணம்,திருவாரூர் லீலை,ஏழாயிரப் பிரபந்தம்,வல்லான் காவியம் முதலிய நூல்களிலும் சோழ மண்டல முதலிகள் என்னும் காரண பெயரையும்,வீரதீரத் தன்மைகளையும் கூறப்பட்டிருக்கின்றன.


மக்கள் பரப்பு

இம்மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக அரியலூர், அரக்கோணம், ஜெயங்கொண்டம், திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, தர்மபுரி, தஞ்சை, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர்.இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும்,ஏராளமானோர் வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.